TNPSC Thervupettagam

உலகளாவிய குழந்தை மேதை விருது 2020

January 5 , 2020 1666 days 663 0
  • துபாயைச் சேர்ந்த இந்தியச் சிறுமியான சுசேதா சதீஷ் என்பவர் பாடும் பிரிவில் ‘2020 ஆம் ஆண்டின் 100 நபர்களைக் கொண்ட உலகளாவிய குழந்தை மேதை விருதினை’ வென்றுள்ளார்.
  • 12 வயது நிரம்பிய இவர் துபாயின் இந்திய துணைத் தூதரக அரங்கில் 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் 6 மணி நேரம் 15 நிமிடங்களில் 102 வெவ்வேறு மொழிகளில் பாடி தனது இரட்டை உலகச் சாதனையைப் படைத்தார்.
  • இவர் தற்போது 120 மொழிகளில் பாடும் திறன் கொண்டு விளங்குகின்றார். இவர் சமீபத்தில் தனது இரண்டாவது பாடல் தொகுப்பான ‘யா ஹபிபி’ என்பதனை அரபி மொழியில் வெளியிட்டுள்ளார்.

உலகளாவிய குழந்தை மேதை விருது

  • நடனம், இசை, கலை, எழுத்து, நடிப்பு, மாடலிங் (விளம்பரத்தில் நடித்தல்), அறிவியல், விளையாட்டு போன்றவற்றில் குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு தளமாக இந்த விருது விளங்குகின்றது.
  • இந்த விருதானது டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச அமைப்பு  மற்றும் ஏஆர் ரஹ்மான் ஆகியோரினால் ஆதரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்