நோய்களைத் தடுப்பதிலும் உயிர்களைக் காப்பதிலும் கை கழுவுதலானது வகிக்கும் ஒரு முக்கியப் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தினமானது முதன்முதலில் 2008 ஆம் ஆண்டில் உலகளாவியக் கை கழுவுதல் கூட்டாண்மை (GHP) மூலம் தொடங்கப்பட்டது.
வயிற்றுப்போக்கு மற்றும் சுவாச நோய்த்தொற்றுகள் போன்ற பல்வேறு நோய்களைத் தடுப்பதற்கு, குறிப்பாக குழந்தைகள் மத்தியில் சோப்பு கொண்டு கைகளைக் கழுவும் பழக்கம் மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Why are clean hands still important?" என்பது ஆகும்.