TNPSC Thervupettagam

உலகளாவிய சதுப்புநில கண்ணோட்ட அறிக்கை

September 29 , 2018 2154 days 636 0
  • உலகளாவிய ஈர நில கண்ணோட்ட அறிக்கையானது ராம்சார் சதுப்புநில உடன்படிக்கையினால் வெளியிடப்பட்ட முதலாவது சதுப்புநிலம் குறித்த அறிக்கை ஆகும்..
  • இந்த அறிக்கையின்படி
    • 1970 - 2015 ஆகியவற்றின் இடைப்பட்ட 45 ஆண்டு கால அளவில் உலகின் 35% சதுப்பு நிலங்கள் அழிந்துவிட்டன.
    • வருடாந்திர சராசரி ஈர நில இழப்பானது 0.78% என்ற அளவில் உள்ளது. இது எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளை அளிக்கும்.
    • 1990 - 2015க்கு இடைப்பட்ட கால அளவில் சராசரி வருடாந்திர இழப்பு வீதத்தை விட 3 மடங்கு வேகத்தில் வருடத்திற்கு 0.24% அளவிற்கு நீர் விநியோகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவிற்கு ஈர நிலங்கள் குறைந்துள்ளன.
    • 80% க்கும் அதிகமான அளவில் கழிவுநீர்கள் போதிய அளவுக்கு சுத்திகரிக்கப்படாமல் சதுப்பு நிலங்களில் வெளியிடப்படுகின்றன.
  • சதுப்பு நிலங்கள் குறைவதற்கான காரணங்களாவன
    • காலநிலை மாற்றம், மக்கள்தொகை பெருக்கம், நகர்மயமாதல் (குறிப்பாக கடற்கரை மண்டலங்கள் மற்றும் ஆற்றுச் சமவெளிப் பகுதிகள்).
    • நுகர்வு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் விவசாயம் மற்றும் நிலம் மற்றும் நீர் ஆகியவற்றை பயன்படுத்துவதில் ஏற்பட்ட மாற்றங்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்