TNPSC Thervupettagam

உலகளாவிய சமூகப் பாதுகாப்பில் நிலவும் இடைவெளியை நிரப்புதலுக்கான நிதி - ILO அறிக்கை

June 5 , 2024 171 days 177 0
  • குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உலகளாவிய சமூகப் பாதுகாப்பினை அடைய கூடுதலாக 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப் படுகிறது.
  • அனைத்து குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீத நிதி இடைவெளியைக் கொண்டுள்ளன.
  • ஆனால் குறைவான வருமானம் உள்ள நாடுகளில், இது அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52.3 சதவீதமாக உள்ளது.
  • பிராந்திய ரீதியாக, அனைவருக்குமானப் பரவலை அடைவதில் ஆப்பிரிக்கா மிகப் பெரியதொரு சவாலை எதிர்கொள்கிறது என்பதோடு ஆண்டிற்குப் பிராந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17.6 சதவீத அளவிற்கு நிதி இடைவெளி உள்ளது.
  • இதைத் தொடர்ந்து அரபு நாடுகளில் உள்ள குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் பிராந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.4 சதவீத அளவு நிதி இடைவெளியுடன் உள்ளன மற்றும் லத்தீன் அமெரிக்கன் மற்றும் கரீபியன் 2.7 சதவீத இடைவெளியுடன் உள்ளன.
  • ILO அமைப்பின் புள்ளி விவரங்களின்படி, இன்று உலகளவில் 4.1 பில்லியன் மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு இல்லை.
  • உலக மக்கள்தொகையில் சுமார் 29% பேர் மட்டுமே போதுமான சமூகப் பாதுகாப்புப் பலன்களை கொண்டுள்ளனர் மற்றும் 55% பேருக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்