உலகளாவிய பொருள்களுக்கான ஆலோசனை நிறுவனமான இன்டர்பிராண்ட்ஸின் “உலகளாவிய சிறந்த 100 பிராண்டுகள் 2018” அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த பிராண்டாக கூகுள் நிறுவனத்தை பின்தள்ளி ஆப்பிளானது முதலிடத்தைப் பிடித்துள்ளது.
முகநூலானது தரவுமீறல் சிக்கல்களில் ஆழ்ந்துள்ள நிலையில் உலகளாவிய 100 பிராண்டுகளில் 9-வது இடத்தில் உள்ளது.
அமேசான் 56% வளர்ச்சியைப் பெற்று உலகளவில் 3-வது பிராண்டாக உள்ளது.
இந்த அறிக்கையின்படி ஆப்பிளின் பிராண்ட் மதிப்பானது 16% உயர்ந்து (ஆண்டில்) 214.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் $1 ட்ரில்லியன் சந்தைத் திறனையடைந்த முதல் நிறுவனமாக ஆப்பிள் மாறியுள்ளது.