ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP - United Nation Environment Program) “சுகாதாரமான கோள், ஆரோக்கியமான மக்கள்” எனும் தலைப்பில் உலகளாவிய சுற்றுச்சூழல் கண்ணோட்ட அறிக்கை 2019-ஐ வெளியிட்டுள்ளது.
1997 ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையின் 6-வது அறிக்கை இதுவாகும். மேலும் இவை UNEPயின் ஒரு முக்கியமான மற்றும் விரிவான சுற்றுச்சூழல் அறிக்கையாகும்.
இந்த அறிக்கையானது மனித நடவடிக்கைகளானது உலகளாவிய சுற்றுச்சூழலை சீர்கெடுக்கின்றது எனவும் அவை “சமுதாயத்தின் சூழலியல் அடிப்படைகளுக்கும்” மனித ஆரோக்கியத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் எனவும் கூறுகிறது.
மேலும் கால நிலை மாற்றத்தோடு மாசுபாடு மற்றும் பல்லுயிர்த் தன்மை இழப்பு ஆகியவையும் மிகப்பெரிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளன.