உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது, அதன் இரண்டாவது உலகளாவிய சோடியம் அளவுக்குறியீடுகளை வெளியிட்டுள்ளது.
இது சோடியம் உட்கொள்வதைக் குறைப்பதில் உள்ள முன்னேற்றத்தை மதிப்பிடச் செய்வதற்கும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் தொடர்பான நாள்பட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகளைத் தடுப்பதற்கும் பயன்படுத்தப் படும் சோடியம் உள்ளடக்கத்திற்கான அளவுக்குறியீட்டுமதிப்புகளின் புதுப்பிக்கப்பட்டப் பட்டியல் ஆகும்.
2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளியிடப்பட்ட உலக சுகாதார அமைப்பின் முதல் உலகளாவிய சோடியம் அளவுக் குறியீடு ஆனது, வெவ்வேறு உணவு வகைகளுக்கான 10 முன் தீர்மானிக்கப்பட்ட அளவுக்குறியீடுகளைக் கொண்டுள்ளது.