TNPSC Thervupettagam

உலகளாவிய தண்ணீர் நெருக்கடி அறிக்கை

May 28 , 2024 179 days 201 0
  • இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற 10வது உலகத் தண்ணீர் மன்றத்தில் உலக வங்கியானது "பகிரப்பட்ட செழுமைக்கான நீர்" என்ற புதிய தலைப்பிலான ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள சுமார் 2.2 பில்லியன் மக்கள் பாதுகாப்பான முறையில் மேலாண்மை செய்யப்பட்ட குடிநீர் சேவைகளைப் பெற்றிருக்கவில்லை.
  • 3.6 பில்லியன் மக்கள் பாதுகாப்பான முறையில் மேலாண்மை செய்யப்பட்ட சுகாதார சேவைகளைப் பெற்றிருக்கவில்லை, மேலும் 2.3 பில்லியன் மக்கள் அடிப்படையான கை கழுவும் வசதிகளைப் பெற்றிருக்கவில்லை.
  • உலக மக்கள் தொகையில் 36% கொண்டுள்ள சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் 11% நன்னீர் மட்டுமே காணப்படுகின்றன, அதே நேரத்தில் 5% மக்கள்தொகை கொண்ட வட அமெரிக்கா நாட்டில் 52% நன்னீர் காணப்படுகிறது.
  • உலகளவில், 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உச்சகட்ட வறட்சி ஏற்படும் நிலையிலான ஆபத்தில் உள்ளனர், மேலும் அதை விட இரண்டு மடங்கிற்கும் அதிக மக்கள் வெள்ளத்தினால் பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளில் வாழ்கின்றனர்.
  • குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் உள்ள 56 சதவீத வேலைவாய்ப்புகளில் அதிகப் பங்கினை கொண்டுள்ளன, ஆனால் இது அதிக வருமானம் உள்ள நாடுகளில் 20 சதவீதம் மட்டுமே ஆகும்.
  • காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆப்பிரிக்காவின் மொத்த நீர் வளத்தில் பாதிக்கும் மேலான பங்கினைக் கொண்டுள்ளது.
  • சஹேல், தென்கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள முக்கியப் பகுதிகள் அதிக தண்ணீர் நெருக்கடிக்கு உள்ளாகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்