சமீபத்தில் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டு உலகளாவிய தரமான உள்கட்டமைப்பு குறியீட்டின் (GQII) படி, இந்தியா அதன் அங்கீகார வழங்கீட்டு முறையினை கருத்தில் கொள்கையில், உலகின் ஐந்தாவது சிறந்த நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தரவரிசையானது, 184 நாடுகளின் உள்கட்டமைப்புத் தரத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
இந்தக் குறியீட்டில் இந்திய நாட்டின் ஒட்டு மொத்தத் தரவரிசை இன்னும் 10வது இடத்தில் தான் உள்ளது.
அளவியல் மற்றும் தரப்படுத்தலின் ஆகியவற்றின் அடிப்படையில், உலக அளவில் இந்தியா முறையே 21வது மற்றும் 9வது இடத்தில் உள்ளது.
இந்த அறிக்கையின்படி, உலகில் முன்னணியில் உள்ள 25 நாடுகள் முக்கியமாக ஆசிய-பசிபிக், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய பகுதிகளில் அமைந்து உள்ளன.
இப்பட்டியலில் ஜெர்மனி முதலிடம் பெற்றுள்ளது.
அதைத் தொடர்ந்து சீனா, அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன.