TNPSC Thervupettagam

உலகளாவிய தரமான உள்கட்டமைப்பு குறியீடு 2021

February 13 , 2023 679 days 351 0
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டு உலகளாவிய தரமான உள்கட்டமைப்பு குறியீட்டின் (GQII) படி, இந்தியா அதன் அங்கீகார வழங்கீட்டு முறையினை கருத்தில் கொள்கையில், உலகின் ஐந்தாவது சிறந்த நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தத் தரவரிசையானது, 184 நாடுகளின் உள்கட்டமைப்புத் தரத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
  • இந்தக் குறியீட்டில் இந்திய நாட்டின் ஒட்டு மொத்தத் தரவரிசை இன்னும் 10வது இடத்தில் தான் உள்ளது.
  • அளவியல் மற்றும் தரப்படுத்தலின் ஆகியவற்றின் அடிப்படையில், உலக அளவில் இந்தியா முறையே 21வது மற்றும் 9வது இடத்தில் உள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, உலகில் முன்னணியில் உள்ள 25 நாடுகள் முக்கியமாக ஆசிய-பசிபிக், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய பகுதிகளில் அமைந்து உள்ளன.
  • இப்பட்டியலில் ஜெர்மனி முதலிடம் பெற்றுள்ளது.
  • அதைத் தொடர்ந்து சீனா, அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்