TNPSC Thervupettagam

உலகளாவிய திறன்களுக்கான போட்டித் தரவரிசை 2019

January 25 , 2019 2133 days 643 0
  • சுவிட்சர்லாந்தின் தாவோஸில் 2019 ஆம் ஆண்டில் 49-வது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டத்தின் முதல் நாளில் உலகளாவிய திறன்களுக்கான போட்டித் தரவரிசை வெளியிடப்பட்டது.
  • இந்த வருடாந்திரத் தரவரிசை டாடா கம்யூனிகேசன்ஸ் மற்றும் அடெக்கோ குரூப் ஆகிய நிறுவனங்களுடன் இன்ஸீட் என்ற வர்த்தகப் பள்ளியால் தயாரிக்கப்படுகின்றது.
  • இந்த தரவரிசை எவ்வாறு நாடுகள் தங்கள் திறமைகளை வளர்த்து, ஈர்த்து மற்றும் தக்க வைக்கின்றன என்பதை அளவிடுகின்றது.
  • இந்த பட்டியலில் ஒரு படி முன்னேறி 80-வது இடத்தை இந்தியா கைப்பற்றியிருக்கும் போதிலும், பிரிக்ஸ் நாடுகள் மத்தியில் இந்தியா, ஒரு திறன் குறைந்த நாடாக இருக்கின்றது.
  • இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் சுவிட்சர்லாந்தும் அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர், அமெரிக்கா, நார்வே மற்றும்  டென்மார்க் ஆகிய நாடுகளும் உள்ளன.
  • கடந்த 5 வருடங்களில் திறனுக்கான இடைவெளி அதிக மற்றும் குறைவான வருமானமுடைய நாடுகளிடையே அதிகமாகியிருக்கின்றது.
  • சீனாவின் தரவரிசை இரண்டு இடங்கள் சரிந்து 45 ஆக இருந்த போதிலும் பிரிக்ஸ் நாடுகளின் மத்தியில் இது சிறந்த திறமையான நாடாக இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்