TNPSC Thervupettagam

உலகளாவிய திறமைகளுக்கான போட்டித்திறன் குறியீடு

January 29 , 2018 2364 days 789 0
  • டாட்டா கம்யூனிகேஷன், அடெக்கோ குழுமம் போன்றவற்றோடு இணைந்து இன்ஸீட் (Insead) அமைப்பானது உலகளாவிய திறமைகளுக்கான போட்டித்திறன் குறியீட்டின் (Global Talent Competitiveness Index) ஐந்தாவது பதிப்பை வெளியிட்டுள்ளது.
  • நடப்பாண்டிற்கான இக்குறியீட்டின்படி, இந்தியா கடந்த ஆண்டைக் காட்டிலும் 11 இடங்கள் முன்னேறி 92வது இடத்திலிருந்து 81-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இருப்பினும் பிரிக்ஸ் அமைப்பிற்குள், பின்தங்கிய நிலையில் (5வது இடம்) இந்தியா உள்ளது.
  • குறியீட்டு தரவரிசையில் சீனா 43 வது இடத்தைப் பிடித்து, பிரிக்ஸ் நாடுகளுள் முன்னிலை வகிக்கின்றது.
  • இக்குறியீட்டில் சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.

குறியீடைப் பற்றி 

  • திறமையுடையவர்களுக்காக போட்டியிடும் நாடுகளின் திறனை அளவிடும் ஓர் வருடாந்திர தரவரிசைப்படுத்து அறிக்கையே உலகளாவிய திறமைகளுக்கான போட்டித்திறன் குறியீடாகும்.
  • இது 2013-ஆம் ஆண்டு முதல் முறையாக வெளியிடப்பட்டது.
  • இன்ஸீட் அமைப்பு இதனை வெளியிடும் பிரதான அமைப்பாகும்.
  • எப்படி உலக நாடுகள் வளருகின்றன, எப்படி அவை தங்களுடைய வளர்ச்சிக்காக திறமையானவர்களை கவர்ந்து தக்கவைத்துக் கொள்கின்றன போன்றவற்றை இந்த குறியீடு மதிப்பிடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்