டாட்டா கம்யூனிகேஷன், அடெக்கோ குழுமம் போன்றவற்றோடு இணைந்து இன்ஸீட் (Insead) அமைப்பானது உலகளாவிய திறமைகளுக்கான போட்டித்திறன் குறியீட்டின் (Global Talent Competitiveness Index) ஐந்தாவது பதிப்பை வெளியிட்டுள்ளது.
நடப்பாண்டிற்கான இக்குறியீட்டின்படி, இந்தியா கடந்த ஆண்டைக் காட்டிலும் 11 இடங்கள் முன்னேறி 92வது இடத்திலிருந்து 81-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இருப்பினும் பிரிக்ஸ் அமைப்பிற்குள், பின்தங்கிய நிலையில் (5வது இடம்) இந்தியா உள்ளது.
குறியீட்டு தரவரிசையில் சீனா 43 வது இடத்தைப் பிடித்து, பிரிக்ஸ் நாடுகளுள் முன்னிலை வகிக்கின்றது.
இக்குறியீட்டில் சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
குறியீடைப் பற்றி
திறமையுடையவர்களுக்காக போட்டியிடும் நாடுகளின் திறனை அளவிடும் ஓர் வருடாந்திர தரவரிசைப்படுத்து அறிக்கையே உலகளாவிய திறமைகளுக்கான போட்டித்திறன் குறியீடாகும்.
இது 2013-ஆம் ஆண்டு முதல் முறையாக வெளியிடப்பட்டது.
இன்ஸீட் அமைப்பு இதனை வெளியிடும் பிரதான அமைப்பாகும்.
எப்படி உலக நாடுகள் வளருகின்றன, எப்படி அவை தங்களுடைய வளர்ச்சிக்காக திறமையானவர்களை கவர்ந்து தக்கவைத்துக் கொள்கின்றன போன்றவற்றை இந்த குறியீடு மதிப்பிடுகின்றது.