TNPSC Thervupettagam

உலகளாவிய திறமைக்கான வருடாந்திர தரவரிசை 2018 - IMD

November 25 , 2018 2193 days 579 0
  • சுவிட்சர்லாந்தின் IMD வணிகப் பள்ளியால் வெளியிடப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய திறமைக்கான வருடாந்திர தரவரிசையில் (Global Annual talent ranking) இந்தியா 2 இடங்கள் பின்தங்கி 53-வது இடத்தில் உள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தரவரிசையில் இந்தியா 51-வது இடத்தில் இருந்தது.
  • இந்த தரவரிசையில் சுவிட்சர்லாந்து தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது. இந்த தரவரிசையில் டென்மார்க் இரண்டாவது இடத்தில் உள்ளது. டென்மார்க்கிற்கு அடுத்து நார்வே, ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
  • இந்த தரவரிசையின் 6-வது இடத்தில் உள்ள கனடாவே முதல் 10 இடங்களில் ஐரோப்பிய நாடுகள் அல்லாத ஒரே நாடாகும்.
  • 13-வது இடத்தில் உள்ள சிங்கப்பூர் ஆசியப் பிராந்தியத்தில் முதலிடத்தில் உள்ளது. இந்த தரவரிசையில் சீனா 39-வது இடத்தில் உள்ளது.
  • இந்த தரவரிசையானது முதலீடு மற்றும் வளர்ச்சி, முறையீடு மற்றும் தயாராக இருத்தல் ஆகிய மூன்று அளவுருக்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்