அரசாங்கம், வணிகங்கள், ஊடகங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் இந்தியாவானது ஒரு இடம் சரிந்து மூன்றாவது இடத்தினைப் பெற்றுள்ளது.
அதிக வருமானம் கொண்ட நாடுகளின் குழுவில், இந்தோனேசியா, சவுதி அரேபியா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா நான்காவது இடத்தில் இருந்தது.
மிகவும் குறைவான வருமானம் கொண்ட ஒரு மக்கள் தொகையானது, சீனா மற்றும் இந்தோனேசியாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவை மூன்றாவது மிகவும் நம்பகமான நாடாக மாற்றியது.
இந்தியாவினைத் தலைமையகமாகக் கொண்ட சில நிறுவனங்களின் மத்தியில் மற்ற நாடுகளில் உள்ள மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் இந்தியா 13வது இடத்தில் உள்ளது.
வெளிநாட்டுத் தலைமையகங்களைக் கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து ஜப்பான், ஜெர்மனி, ஐக்கியப் பேரரசு, பிரான்சு மற்றும் அமெரிக்கா ஆகியவை இடம் பெற்றுள்ளன.
மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா, சவுதி அரேபியா, சீனா மற்றும் பிரேசில் ஆகியவை இந்தியாவை விட உயர்ந்த தரவரிசையில் உள்ளன.
நம்பிக்கைக் குறியீட்டில், உலகின் மிகப் பெரிய 10 நாடுகளில் ஐந்து நாடுகள் ஆனது, ஜப்பான் (37% குறைந்த நம்பிக்கை), ஜெர்மனி (41%), ஐக்கியப் பேரரசு (43%), அமெரிக்கா (47%) மற்றும் பிரான்சு (48%) என்ற வகையில் குறைந்த நம்பிக்கை கொண்ட நாடுகளுள் அடங்கும்.
வளர்ந்து வரும் நாடுகள் அதிக நம்பிக்கை கொண்டதாக இப்பட்டியலில் இடம் பெற்று உள்ளன, அவை - சீனா (77%), இந்தோனேசியா (76%), இந்தியா (75%) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (72) %.