சர்வதேச நாணய நிதியம் ஆனது, சமீபத்தில் 2025 ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நிலைத் தன்மை அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையானது, உலகளாவிய நிதி அமைப்பு மற்றும் உலகச் சந்தைகளின் மதிப்பீட்டை வழங்குவதோடு மேலும் உலகளாவியச் சூழலில் வளர்ந்து வரும் சந்தை நிதியுதவி விவகாரங்களை கவனிக்கிறது.
உலகளாவியப் புவிசார் அரசியல் அபாயங்கள் அதிகரித்த நிலையில், பெருநிலைப் பொருளாதார நிதியின் உறுதித் தன்மைக்கு அவற்றின் சாத்தியமான தாக்கம் குறித்த கவலைகளை இது எழுப்புகிறது.
குறைந்தபட்ச உலகளாவிய வரியையே பல நாடுகள் ஏற்பதாலும் மற்ற சில நாடுகள் பலதரப்பு வரிக் கொள்கையிலிருந்து விலகுவதாலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
அதிகரித்த இராணுவச் செலவினம் மற்றும் பொருளாதார வீழ்ச்சிகள் ஆனது, அரசின் கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையே உள்ள முக்கிய விகிதங்களை உயர்த்தி, நிதி நிலைத் தன்மைச் சிக்கல்கள் மற்றும் இறையாண்மை ஆபத்தை நன்கு அதிகரிக்கின்றன.
புவிசார் அரசியல் அபாயங்கள் என்பவை பொதுவாக முதலீட்டாளர் நம்பிக்கையைக் குறைக்கின்றன என்பதோடு இது சந்தையின் நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிகமான ஏற்ற இறக்கத்திற்கு வழி வகுக்கிறது.