ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தினால் (ANU) 2024 ஆம் ஆண்டு உலகளாவிய நீர்க் கண்காணிப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் மட்டும், நீர் தொடர்பான பேரழிவுகள் சுமார் 8,700க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி வாங்கியுள்ளதோடு, இதனால் சுமார் 40 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இது 550 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது.
குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் பிரேசில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப் பெருக்கு ஆகியவை அடங்கும்.
2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியுடன் ஒப்பிடச் செய்கையில், 2024 ஆம் ஆண்டில் மாதாந்திர மழைப்பொழிவு ஆனது 27% அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினசரி மழைப் பதிவு ஆனது 52% அதிகரித்துள்ளது.
மாறாக, குறைவான மழைப்பொழிவு பதிவுகளும் அடிக்கடி பதிவாகின.