TNPSC Thervupettagam

உலகளாவிய நீர் கண்காணிப்பு அறிக்கை 2024

January 10 , 2025 12 days 92 0
  • ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தினால் (ANU) 2024 ஆம் ஆண்டு உலகளாவிய நீர்க் கண்காணிப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் மட்டும், நீர் தொடர்பான பேரழிவுகள் சுமார் 8,700க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி வாங்கியுள்ளதோடு, இதனால் சுமார் 40 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
  • இது 550 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது.
  • குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் பிரேசில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப் பெருக்கு ஆகியவை அடங்கும்.
  • 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியுடன் ஒப்பிடச் செய்கையில், 2024 ஆம் ஆண்டில் மாதாந்திர மழைப்பொழிவு ஆனது 27% அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • தினசரி மழைப் பதிவு ஆனது 52% அதிகரித்துள்ளது.
  • மாறாக, குறைவான மழைப்பொழிவு பதிவுகளும் அடிக்கடி பதிவாகின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்