நெகிழி மாசுபாடு தொடர்பான ஒரு சர்வதேச சட்டப்பூர்வ ஒப்பந்தத்தை உருவாக்கச் செய்வதற்கான அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக் குழுவின் (INC-4) நான்காவது அமர்வு ஆனது சமீபத்தில் கனடாவின் ஒட்டாவா நகரில் நடைபெற்றது.
இக்குழுவின் முந்தைய அமர்வுகள் உருகுவே, பிரான்சு மற்றும் கென்யா ஆகிய இடங்களில் நடைபெற்றன.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், நெகிழி மாசுபாடு குறித்த உலகளாவிய ஒப்பந்தத்தினை உருவாக்குவதற்கான வரலாற்று சிறப்புமிக்கத் தீர்மானத்தினை ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் சபை ஏற்றுக்கொண்டது.
உற்பத்தி, வடிவமைப்பு மற்றும் அகற்றல் உள்ளிட்ட நெகிழியின் ஒட்டுமொத்த வாழ்வியல் சுழற்சியை நிவர்த்தி செய்வதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய வேண்டும் என்ற ஒரு இலட்சிய இலக்குடன் 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக் குழு தனது பணியைத் தொடங்கியது.