அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, பூமியில் உள்ள கால் பங்கு நைட்ரஜனானது புவியினுடைய பாறைப் படுகைகளின் (bedrock) வானிலைக் காரணமான பாறைச் சிதைவுறுச் (weathering) செயல்பாடுகளினால் உருவாகின்றன.
நீண்ட நாட்களாகவே, நடப்பளவிலான அறிவியலானது (prevailing science) தாவரங்களுக்கு கிடைக்கக்கூடிய பூமியில் உள்ள அனைத்து நைட்ரஜன்களும் வளிமண்டலத்திலிருந்தே கிடைக்கின்றன என உணர்த்தி வந்தது.
தற்போது இந்த ஆய்வானது, இயற்கைச் சூழலமைவில் (Natural ecosystems) உள்ள நைட்ராஜனில் 26 சதவீதமானது பாறைகளிலிருந்து கிடைக்கின்றது எனவும், மீதி அளவானது வளி மண்டலத்திலிருந்து கிடைக்கிறது எனவும் கண்டறிந்து உள்ளது.
பாறைகளிலிருந்து பெறக்கூடிய நைட்ரஜனானது (Rock-derived nitrogen) வனங்களின் வளர்ச்சி மற்றும் புல்வெளிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும் அவற்றை முன்பு எண்ணியதைக் காட்டிலும் அதிக அளவில் கார்பன்-டை-ஆக்ஸைடை உட்கிரக்க அனுமதிக்கும்.
இந்த ஆய்வானது நைட்ரஜன் பாறைச் சிதைவுறல் (Nitrogen weathering) செயல் முறையானது உலக அளவில் மண்ணிற்கும் இயற்கைச் சூழலமைவிற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, ஊட்டச்சத்துகளுக்கான மூல ஆதாரம் (source of nutrition) என்பதை வெளிக்காட்டுகின்றது.
இந்த கண்டுபிடிப்பானது பருவநிலை மாற்றக் கணிப்புகளை (Climate Change Projections) பெருமளவில் அதிகரிக்கும்.