TNPSC Thervupettagam

உலகளாவிய நைட்ரஸ் ஆக்சைடு மதிப்பீட்டு அறிக்கை

November 29 , 2024 23 days 81 0
  • நைட்ரஸ் ஆக்சைடு ஆனது 120 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது மற்றும் பூமியை வெப்பமாக்குவதில் ஒரு டன் உமிழ்வு கார்பன் டை ஆக்சைடை விட தோராயமாக 270 மடங்கு சக்தி வாய்ந்தது.
  • இன்றுவரையில் நிகரப் புவி வெப்பமடைதலில் தோராயமாக 10% (சுமார் 0.1°C) ஆனது மனிதகுல உமிழ்வுகள் காரணமாக ஏற்பட்டதாகும்.
  • வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் ஆனது, தொழிற்துறைக்கு முந்தைய காலத்தில் இருந்து 20% அதிகரித்துள்ளது.
  • கடந்த ஐந்தாண்டுகளில் (2017–2021) வருடாந்திர வளர்ச்சி விகிதம் ஆனது, ஆண்டிற்குப் பில்லியனுக்கு 1.2 பாகங்கள் ஆகவும், 2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில் (2000-2004) இருந்த அளவை விட இரு மடங்கு அதிகமாகவும் இருந்தது.
  • 1980 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், வளிமண்டல வாயுச் செறிவுகள் ஒரு பில்லியனுக்கு 301 முதல் 336 பாகங்களாக அதிகரித்தன.
  • தற்போது அவற்றுள் 75% உமிழ்வுகளுக்கு வேளாண்மை தான் முதன்மை ஆதாரமாக உள்ளது.
  • இதில் தோராயமாக 90% உமிழ்வானது, வேளாண் நிலங்களில் செயற்கை உரங்கள் மற்றும் இயற்கை உரங்கள் பயன்படுத்தப் படுவதாலும், சுமார் 10% உமிழ்வானது உர மேலாண்மை நடவடிக்கைகளாலும் ஏற்படுகிறது.
  • நைட்ரஸ் ஆக்சைடானது தற்போது ஓசோன்-அடுக்கு சிதைவை ஏற்படுத்துகின்ற வளி மண்டலத்தில் உமிழப் படும் வாயுவாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்