TNPSC Thervupettagam

உலகளாவிய நோய்த் தடுப்பு மருந்து மீதான மாநாடு

June 6 , 2020 1542 days 585 0
  • ஐக்கிய இராஜ்ஜியம் தலைமையிலான உலகளாவிய நோய்த் தடுப்பு மருந்து மீதான மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள இருக்கின்றது.
  • 50 நாடுகள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் இந்தியாவும் ஒன்றாகும்.
  • இந்த மாநாடானது நோய்த் தடுப்பு மருந்துக் கூட்டமைப்பான “GAVI” என்ற அமைப்பிற்காக குறைந்தது 7.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு நிதியைத் திரட்டுவதற்காக நடத்தப் படுகின்றது.
  • “GAVI” என்ற கூட்டமைப்பானது யுனிசெப், உலக சுகாதார நிறுவனம், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, உலக வங்கி, ஆராய்ச்சி நிறுவனங்கள், தடுப்பு மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இதர தனியார் நிறுவனப் பங்களிப்பாளர்கள் ஆகியோருடன் இணைந்து 2000 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்