உலகளாவிய நோய்த் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பற்றிய அறிக்கை
May 19 , 2022 921 days 474 0
உலக சுகாதார அமைப்பின் புதிய அறிக்கையானது, நல்ல கை சுகாதாரம் மற்றும் பிற திறன்மிக்க நடைமுறைகளைப் பின்பற்றினால், நோய்த் தொற்றுகள் 70% வரை தடுக்கப் படலாம் என்று குறிப்பிடுகிறது.
சுகாதார நலன் சார்ந்த நோய்த்தொற்றுகள் சுகாதாரச் சேவை வழங்கீட்டின் போது அடிக்கடி ஏற்படும் பாதகமானப் பதிப்புகளில் ஒன்றாகும்.
அதிக வருமானம் உள்ள நாடுகளில் சராசரியாக 7% நோயாளிகளும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 15% நோயாளிகளும் மருத்துவமனையில் அவர்கள் இருக்கும் காலத்தில் சுகாதார நலன் சார்ந்த நோய்த் தொற்றுகளைப் பெறுவர்.
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் தொற்றுப் பதிவுகளில் ஏறத்தாழ நான்கில் ஒன்று மற்றும் வயது வந்தோருக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப் படும் உறுப்புச் செயலிழப்புடன் கூடிய தொற்றுப் பாதிப்புகளில் கிட்டத் தட்ட பாதியளவு சுகாதார நல வழங்கீட்டுடன் தொடர்புடையவையாகும்.