TNPSC Thervupettagam

உலகளாவிய பருவகாலப் புதுப்பிப்பு அறிக்கை

November 5 , 2020 1394 days 608 0
  • உலகப் பருவ கால காலநிலைப் புதுப்பிப்பு அறிக்கையானது உலக வானிலை அமைப்பினால் (World Meteorological Organization - WMO) தயாரிக்கப்பட்டு வெளியிடப் பட்டுள்ளது.
  • தற்பொழுது நீண்ட காலத்திற்கு முன்னெச்சரிக்கைகளை வெளியிடும் வகையில்  WMO அமைப்பின் 13 உலகளாவிய வெளியீட்டு மையங்கள் உள்ளன.
  • WMO அமைப்பின் படி, கடந்த 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்பு லா - நினோ நிகழ்வானது மத்திய மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டுப் பசிபிக் கடலில் மீண்டும் நிகழ்கின்றது.
  • 2021 ஆம் ஆண்டு வரை தொடரும் 2020 ஆம் ஆண்டின் லா நினோவானது மிதமானதில் இருந்து வலுவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • லா நினோ என்பது மத்திய மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டுப் பசிபிக் கடல் பகுதியில் அதன் மேற்பரப்பு வெப்பநிலையானது  அதிக அளவில் குளிர்விக்கப் படுதலைக் குறிக்கின்றது.
  • இது எல் நினோ தெற்கு அலைவுகளின் (El Niño Southern Oscillation- ENSO) வெப்பமான நிலையான எல் நினோ வானிலை மற்றும் காலநிலை மீது எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
  • இந்தியாவில், லா நினோவானது  வழக்கமான மழைப் பொழிவை, விட அதிகமாக வெள்ளம் ஏற்படும் அளவிற்கு மழைப் பொழிவைத் தருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்