TNPSC Thervupettagam

உலகளாவிய பல் வகைப்பாட்டு நன்னீர் வாழ் விலங்கின மதிப்பீடு

January 13 , 2025 2 days 50 0
  • IUCN அமைப்பின் அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனங்களை உள்ளடக்கிய செந்நிறப் பட்டியலுக்கான முதல் உலகளாவிய பல் வகைப்பாட்டு நன்னீர் வாழ் விலங்கின மதிப்பீடு ஆனது சமீபத்தில் நடத்தப்பட்டது.
  • இது மேற்குத் தொடர்ச்சி மலைகளை, மிக அச்சுறுத்தலுக்கு உள்ளான நன்னீர் வாழ் இனங்கள் மிகுதியாக உள்ள ஒரு முக்கிய இடமாக அடையாளம் கண்டுள்ளது.
  • இந்த விரிவான ஒரு உலகளாவிய மதிப்பீடு ஆனது 23,496 பத்துக் கால்களை உடைய ஓடுடைய இனங்கள், மீன்கள் மற்றும் தட்டான் இனங்களை உள்ளடக்கியது.
  • கி.பி 1500 ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ கால் பகுதி நன்னீர் இனங்களானது அதிக அழிவுரும் அபாயத்தை எதிர்கொள்கின்றன என்பதோடு மேலும் 89 இனங்கள் அழிந்து விட்டதாக உறுதிப்படுத்தப் பட்டதாகவும் மற்றும் 187 இனங்கள் அழிவிற்குள்ளாக உள்ளதாகவும் பதிவாகியுள்ளன.
  • நன்னீர் வாழ் பத்துக்காலிகள், மீன்கள் மற்றும் தட்டான் இனங்களில், அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களில் 54% ஆனது மாசுபாட்டால் பாதிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் 39% இனங்கள் அணைகள் மற்றும் நீரேற்ற பிரித்தெடுத்தல் அமைப்புகளால் பாதிக்கப்படுகின்றன.
  • வேளாண்மையுடன் நெருங்கியது தொடர்புடைய நிலப் பயன்பாடு மாற்றம் ஆனது, இந்த உயிரினங்களில் சுமார் 37% இனங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது,  மேலும் ஊடுருவல் இனங்கள் மற்றும் நோய்களின் தாக்கம் ஆனது 28% இனங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்