உலகளாவிய பல் வகைப்பாட்டு நன்னீர் வாழ் விலங்கின மதிப்பீடு
January 13 , 2025 9 days 76 0
IUCN அமைப்பின் அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனங்களை உள்ளடக்கிய செந்நிறப் பட்டியலுக்கான முதல் உலகளாவிய பல் வகைப்பாட்டு நன்னீர் வாழ் விலங்கின மதிப்பீடு ஆனது சமீபத்தில் நடத்தப்பட்டது.
இது மேற்குத் தொடர்ச்சி மலைகளை, மிக அச்சுறுத்தலுக்கு உள்ளான நன்னீர் வாழ் இனங்கள் மிகுதியாக உள்ள ஒரு முக்கிய இடமாக அடையாளம் கண்டுள்ளது.
இந்த விரிவான ஒரு உலகளாவிய மதிப்பீடு ஆனது 23,496 பத்துக் கால்களை உடைய ஓடுடைய இனங்கள், மீன்கள் மற்றும் தட்டான் இனங்களை உள்ளடக்கியது.
கி.பி 1500 ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ கால் பகுதி நன்னீர் இனங்களானது அதிக அழிவுரும் அபாயத்தை எதிர்கொள்கின்றன என்பதோடு மேலும் 89 இனங்கள் அழிந்து விட்டதாக உறுதிப்படுத்தப் பட்டதாகவும் மற்றும் 187 இனங்கள் அழிவிற்குள்ளாக உள்ளதாகவும் பதிவாகியுள்ளன.
நன்னீர் வாழ் பத்துக்காலிகள், மீன்கள் மற்றும் தட்டான் இனங்களில், அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களில் 54% ஆனது மாசுபாட்டால் பாதிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் 39% இனங்கள் அணைகள் மற்றும் நீரேற்ற பிரித்தெடுத்தல் அமைப்புகளால் பாதிக்கப்படுகின்றன.
வேளாண்மையுடன் நெருங்கியது தொடர்புடைய நிலப் பயன்பாடு மாற்றம் ஆனது, இந்த உயிரினங்களில் சுமார் 37% இனங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது, மேலும் ஊடுருவல் இனங்கள் மற்றும் நோய்களின் தாக்கம் ஆனது 28% இனங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.