TNPSC Thervupettagam

உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு 2020

December 19 , 2019 1710 days 1713 0
  • 2020 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீட்டில் மொத்தமுள்ள 153 நாடுகளில் இந்தியா 112வது இடத்தில் உள்ளது.
  • இந்தக் குறியீடானது உலகப் பொருளாதார மன்றத்தினால் (WEF - World Economic Forum) வெளியிடப் பட்டுள்ளது.
  • முதலாவது பாலின இடைவெளிக் குறியீடானது 2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
  • இந்தக் குறியீட்டில் அதிகபட்ச மதிப்பெண் 1 (சமத்துவம்) மற்றும் மிகக் குறைந்த மதிப்பெண் 0 (சமத்துவமின்மை) ஆகும்.

முக்கிய அம்சங்கள்

  • ஐஸ்லாந்து (கிட்டத்தட்ட 88% அளவிற்கு நெருக்கமாக) தொடர்ந்து 11 ஆண்டுகளாக உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீட்டில் முதலிடத்தில் உள்ளது.
  • இந்தக் குறியீட்டில் ஏமன் கடைசி இடத்தில் (153 வது) உள்ளது.
  • அரசியல் அதிகாரமளிப்பதில் மிகப்பெரிய பாலின ஏற்றத்தாழ்வு உள்ளது.
  • இந்தக் குறியீட்டின் கடந்த பதிப்பில் இந்தியா 108வது இடத்திலிருந்து 112வது இடத்திற்கு சறுக்கி உள்ளது.
  • ஆய்வு செய்யப்பட்ட 153 நாடுகளில், அரசியல் பாலின இடைவெளியை (0.411) விட பொருளாதாரப் பாலின இடைவெளி (0.354) அதிகமாக இருக்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமேயாகும்.
  • நான்கு குறிகாட்டிகளில் இந்தியாவின் செயல்திறன்:
    • பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வாய்ப்புகள் - 149வது இடம்
    • கல்வித் திறனை அடைதல் - 112வது இடம்
    • உடல்நலம் மற்றும் உயிர் வாழ்தல் - 150வது இடம்
    • அரசியல் அதிகாரம் - 18வது இடம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்