TNPSC Thervupettagam

உலகளாவிய புகையிலைப் பயன்பாடு தொடர்பான போக்குகள்

December 26 , 2019 1703 days 616 0
  • உலக சுகாதார அமைப்பானது உலகளாவிய புகையிலைப் பயன்பாடு குறித்த போக்குகள் என்ற தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின் படி, உலகளவில் புகையிலையைப் பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கையானது தற்பொழுது முதன்முறையாகக் குறைந்துள்ளது.
  • உலகில் உள்ள அனைத்துப் பகுதிகளை விடவும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் புகையிலை அதிகம் பயன்படுத்தப் படுகின்றது.
  • இந்த அறிக்கையின் படி, 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் புகையிலைப் பயன்பாட்டுக் குறைப்பான 30% என்ற இலக்கை அடைவதற்கான இந்தியாவின்  பயணம் வழி தவறி இருக்கின்றது.
  • இந்த இலக்கை அடைவதற்கான சரியான வழியில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரே பகுதி அமெரிக்கா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்