TNPSC Thervupettagam

உலகளாவிய புத்தாக்கக் குறியீடு

September 5 , 2020 1415 days 811 0
  • 2020 ஆம் ஆண்டின் உலகளாவிய புத்தாக்கக் குறியீடானது உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு, கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் INSEAD வணிகப் பள்ளி ஆகியவற்றினால் கூட்டாக வெளியிடப் பட்டுள்ளது.
  • இந்தப் புத்தாக்கத் தரவரிசையில் சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.
  • இந்தியா 48வது  இடத்தைப் பிடித்து முதன்முறையாக முதல் 50 நாடுகளைக் கொண்ட குழுவில் இணைந்துள்ளது.
  • மேலும் இது உலகில் குறைந்த நடுத்தர-வருமானம் கொண்ட பொருளாதார நாடுகள் பிரிவில் மூன்றாவது சிறந்தப் புத்தாக்க நாடாக உருவெடுத்துள்ளது.
  • இந்தியாவானது தகவல் தொழில்நுட்பத் துறை சேவைகள் ஏற்றுமதி, அரசின் நிகழ்நேரச் சேவைகள், அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், தீவிர ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு கொண்ட உலகளாவிய நிறுவனங்கள் போன்ற 15 குறிகாட்டிகளில் முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்