2020 ஆம் ஆண்டின் உலகளாவிய புத்தாக்கக் குறியீடானது உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு, கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் INSEAD வணிகப் பள்ளி ஆகியவற்றினால் கூட்டாக வெளியிடப் பட்டுள்ளது.
இந்தப் புத்தாக்கத் தரவரிசையில் சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.
இந்தியா 48வதுஇடத்தைப் பிடித்து முதன்முறையாக முதல் 50 நாடுகளைக் கொண்ட குழுவில் இணைந்துள்ளது.
மேலும் இது உலகில் குறைந்த நடுத்தர-வருமானம் கொண்ட பொருளாதார நாடுகள் பிரிவில் மூன்றாவது சிறந்தப் புத்தாக்க நாடாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவானது தகவல் தொழில்நுட்பத் துறை சேவைகள் ஏற்றுமதி, அரசின் நிகழ்நேரச் சேவைகள், அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், தீவிர ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு கொண்ட உலகளாவிய நிறுவனங்கள் போன்ற 15 குறிகாட்டிகளில் முதலிடத்தில் உள்ளது.