உலகளாவிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய ILO அறிக்கை 2022
January 25 , 2025 3 days 37 0
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஆனது நான்காவது 'சர்வதேசப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய உலகளாவிய மதிப்பீடுகள்' அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.
2022 ஆம் ஆண்டில், உலகளாவிய தொழிலாளர் வளத்தில் சர்வதேச புலம்பெயர்ந்தோர் (IM) 4.7% (167.7 மில்லியன்) பேர் இருந்தனர் என்ற ஒரு நிலையில் இது வேலைவாய்ப்பில் உள்ளவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு எதுவுமில்லாதவர்கள் (ஆனால் வேலை செய்யத் தயாராக உள்ளவர்கள்) என வரையறுக்கப் படுகிறது; இது 2013 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 30 மில்லியனுக்கும் அதிகமாகும்.
155.6 மில்லியன் பேர் வேலைவாய்ப்பில் இருந்தனர் மற்றும் 12.1 மில்லியன் பேர் வேலை வாய்ப்பில்லாமல் இருந்தனர்.
உலகளவில் ஆண்களுக்கான ஒட்டு மொத்த வேலைவாய்ப்பில் சர்வதேச அளவில் ஆண்களின் பங்கு சுமார் 4.7% ஆகவும், பெண்களின் பங்கு 4.4% ஆகவும் மதிப்பிடப் பட்டுள்ளது.
இருப்பினும், 2019-2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், வளர்ச்சி விகிதம் ஆனது பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டதனால் வருடாந்திர வீதத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்தது.
மொத்தமுள்ள 102.7 மில்லியனில் 61.3% பேர் என்ற மிக அதிக விகிதத்திலான சர்வதேச புலம்பெயர் ஆண்கள் வேலைவாய்ப்பு பெற்று இருந்தனர்.
மாறாக, 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 64.9 மில்லியனில் 38.7% சர்வதேச புலம்பெயர்ந்த பெண்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெற்று இருந்தனர்.
74.9% (125.6 மில்லியன்), முதன்மை வயது வரம்பிலான IM தொழிலாளர்கள் - 25 முதல் 54 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பாலரும் - 2022 ஆம் ஆண்டில் தொழிலாளர் வளத்தில் உள்ள IM தொழிலாளர்களில் மிகப்பெரியப் பெரும்பான்மை பங்கினை கொண்டிருந்தனர்.
10 சர்வதேசப் புலம்பெயர் நபர்களில் ஒன்றுக்கும் குறைவானவர்களே 25 வயதுக்குக் குறைவானவர்கள் ஆவர்.
உலகளாவியத் தொழிலாளர் வளத்தில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளம் சர்வதேசப் புலம் பெயர் தொழிலாளர்கள் 9.3% (15.5 மில்லியன் பேர்) மட்டுமே ஆகும்.
55 முதல் 64 வயதுக்குட்பட்ட சர்வதேசப் புலம்பெயர் நபர்கள் 12.5% ஆகவும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3.4% ஆகவும் இருந்தனர்.