TNPSC Thervupettagam

உலகளாவிய மார்பகப் புற்றுநோய் பாதிப்பு விகிதங்கள்

March 4 , 2025 30 days 69 0
  • ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளானது உலகிலேயே மிகவும் அதிக மார்பகப் புற்றுநோய் பாதிப்பு விகிதங்களைக் கொண்டுள்ளன.
  • உலகளவில் 20 பெண்களில் ஒருவர் அவர்களின் வாழ்நாளில் மார்பகப் புற்றுநோயைக் கொண்டிருப்பர் என்பதோடு மேலும் 70 பேரில் ஒருவர் இந்த நோயால் உயிரிழப்பர்.
  • ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இந்த நோய்ப் பாதிப்பு விகிதங்கள் அதிகமாக உள்ளன.
  • அதைத் தொடர்ந்து வட அமெரிக்கா மற்றும் வடக்கு ஐரோப்பா இடம் பெற்றுள்ளன என்ற நிலையில் தென்-மத்திய ஆசியாவில் மிகவும் குறைவான விகிதமே பதிவாகி உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் மார்பகப் புற்றுநோயின் வயது வாரியாக வரிசைப்படுத்தப்பட்ட பாதிப்பு விகிதம் (ASIR) ஆனது 100,000 பேருக்கு 100.3 பாதிப்புகளாக இருந்தது கண்டறியப்பட்டது.
  • இதை ஒப்பிடுகையில், தென்-மத்திய ஆசியாவில் ASIR ஆனது சுமார் 100,000 பேருக்கு 26.7 பாதிப்புகளாக இருந்தது.
  • மார்பகப் புற்றுநோய்க்கான ஒரு வயது வாரியான உயிரிழப்பு விகிதம் (ASMR) என்பது மெலனேசியாவில் 100,000 பேருக்கு 26.8 உயிரிழப்புகளாக மிக அதிகமாக இருந்தது.
  • அதைத் தொடர்ந்து பாலினேசியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன என்ற நிலையில் கிழக்கு ஆசியாவில் சுமார் 100,000 பேருக்கு 6.5 உயிர் இழப்புகளாக மிகக் குறைவான ASMR பதிவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்