TNPSC Thervupettagam

உலகளாவிய மின்சாரத் தேவை

February 22 , 2023 516 days 259 0
  • ஆசிய நாடுகளானது முதல் முறையாக 2025 ஆம் ஆண்டில் உலகின் மின்சாரத் தேவையில் பாதியளவினைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • உலக மக்கள்தொகையில் தான் கொண்டுள்ளப் பங்கை விட மிகக் குறைவாகவே ஆப்பிரிக்க நாடுகள் மின்சாரத்தினைப் பயன்படுத்துகின்றன.
  • இந்தக் கணிப்பு அறிக்கையானது சர்வதேச எரிசக்தி முகமையினால் (IEA) வெளியிடப் பட்டுள்ளது.
  • ஆசியாவின் மின்சாரப் பயன்பாட்டில் பெரும்பகுதி சீனா கொண்டிருக்கும்.
  • உலக மின்சாரத் தேவையின் 70 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பானது சீனா, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளினால் ஏற்பட உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் பதிவான சீனாவின் மின்சாரத் தேவையை விட இந்தியாவின் மின் தேவை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
  • சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தேவையானது அந்தப் பிராந்தியத்தின் மொத்த மின்சார நுகர்வில் 70 சதவீதத்தை கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்