2023 ஆம் ஆண்டில் எரிபொருள் பயன்பாட்டிலிருந்து வெளியான மீத்தேன் உமிழ்வு 120 மில்லியன் டன்கள் என்ற மிக உயர்ந்த அளவில் இருந்தது.
வளிமண்டலத்தில் வெளியிடப்பட்ட 120 மெட்ரிக் டன் மீத்தேன்களில், 80 மெட்ரிக் டன்கள் ஆனது, அதிகளவில் மீத்தேன் உமிழ்வு பதிவான முதல் 10 நாடுகளில் இருந்து வெளியாகின.
எண்ணெய் மற்றும் எரிவாயு சார்ந்த நடவடிக்கைகளில் இருந்து அதிக அளவில் மீத்தேன் வெளியேற்றும் நாடாக அமெரிக்கா முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து ரஷ்யாவும் உள்ளது.
மீத்தேன் உமிழ்வு ஆனது, 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் சுமார் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள முக்கியப் புதைபடிவ எரிபொருள் கசிவுகளால் 5 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான மீத்தேன் உமிழ்வுகள் பதிவானதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
பெரும்பாலும் உயிரி எரிபொருள் பயன்பாட்டிலிருந்துப் பெறப்படும் பல்வேறு உயிர் ஆற்றல்களால் 10 மெட்ரிக் டன் மீத்தேன் உமிழ்வு பதிவாகியுள்ளது.