TNPSC Thervupettagam

உலகளாவிய மீன் வளங்களின் அவல நிலை 2024

September 5 , 2024 79 days 122 0
  • முந்தைய மதிப்பீடுகளுடன் ஒப்பிடும் போது பெரும்பாலான மீன் வளங்களின் மீது  அதிகம் மீன்பிடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன அல்லது அவற்றின் வளங்கள் ஏற்கனவே மிகவும் குறைந்து விட்டன என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
  • இந்த அதிகப்படியான மீன்பிடித்தல் நடவடிக்கையானது மீன்களின் எண்ணிக்கையை இயற்கையாகவே மீளுருவாக்கும் செய்யும் மீன் வளங்களின் திறனை விஞ்சியுள்ளது.
  • மீன்பிடி நடவடிக்கையானது அங்கு இயற்கையாக காணப்படும் எண்ணிக்கையில் 10 சதவீதத்திற்குக் கீழே குறையும் போது மீன் வளங்களின் அளவு சரிந்ததாகக் கருதப் படுகிறது.
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பானது (FAO), "அதிகபட்சமாக நிலையான முறையில் மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவை" என வகைப்படுத்தப்பட்ட மீன் வளங்களுள் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வளங்களில் உண்மையில் அதிகமாக மீன் பிடிக்கப்படுகிறது.
  • அதிக அளவில் மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகள் என்ற பிரிவில் முன்னர் மதிப்பிடப் பட்டதை விட மேலும் 85 சதவீத வளங்கள் ஆனது (இயற்கையாக காணப் படும் எண்ணிக்கையில் 10 சதவீதத்திற்குக் கீழே) குறைந்திருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்