TNPSC Thervupettagam

உலகளாவிய முதலீட்டு போக்குகள் கண்காணிப்பு அறிக்கை

January 22 , 2020 1677 days 633 0
  • வர்த்தக மற்றும் மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் நிறுவனமானது தனது 2019 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய முதலீட்டுப் போக்குகள் கண்காணிப்பு என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்தக் குறியீட்டில் உலகில் அதிக அந்நிய நேரடி முதலீட்டை (FDI - Foreign Direct Investment) ஈர்த்து 2019 ஆம் ஆண்டில் சீனா முதலிடத்தில் இருக்கின்றது. 2018 ஆம் ஆண்டிலும் இந்தக் குறியீட்டில் சீனாவே முதலிடத்தில் நீடித்தது. இந்தக் குறியீட்டில் அதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்கா உள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் அமெரிக்கா 251 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்தது. இதில் சீனாவிலிருந்து வந்த முதலீடானது 140 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
  • 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தெற்காசியாவில் அந்நிய நேரடி முதலீடானது 10% அதிகரித்துள்ளது என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
  • இந்தியாவின் FDI காரணமாக தெற்காசியாவில் அந்நிய நேரடி முதலீட்டின் வளர்ச்சியானது முதன்மையாக இருந்தது.
  • 2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடானது 49 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
  • 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019 ஆம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீடானது இந்தியாவில் 16% அதிகரித்துள்ளது என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
  • இந்தியாவில் FDIன் பெரும்பகுதியானது தகவல் தொழில்நுட்பத் துறைக்குச் சென்று உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்