TNPSC Thervupettagam

உலகளாவிய முதலீட்டுப் போக்குகள் கண்காணிப்பு அறிக்கை 2024

February 18 , 2025 4 days 44 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாடு (UNCTAD) 2024 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய முதலீட்டுப் போக்குகள் கண்காணிப்பு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • உலகளாவிய அந்நிய நேரடி முதலீட்டு (FDI) வரவுகள் ஆனது 11% அதிகரித்து 2024 ஆம் ஆண்டில் சுமார் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டின.
  • இருப்பினும், ஐரோப்பிய வரி ஏய்ப்பு மாற்று பொருளாதாரங்கள் வழியான சில பெரும் முதலீடுகளை நீக்கினால் ​​FDI சுமார் 8% குறைந்துள்ளது.
  • வளர்ச்சியடைந்த பொருளாதாரங்களில் FDI 43% அதிகரித்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் சுமார் 6% சரிவுப் பதிவானதைத் தொடர்ந்து, நன்கு வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கான FDI 2024 ஆம் ஆண்டில் 2% குறைந்துள்ளன.
  • புதிய வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டு அறிவிப்புகள் ஆனது எண்ணிக்கையில் 6% குறைந்துள்ளன.
  • ஆப்பிரிக்காவில் FDI 84% அதிகரித்து சுமார் 94 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி உள்ளது என்ற நிலையில் இது முக்கியமாக எகிப்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு பெரிய திட்டத்தால் உந்தப்பட்டது.
  • வளர்ச்சியடைந்து வரும் ஆசியாவிற்கான அந்நிய நேரடி முதலீடு 7% குறைந்துள்ளது அதே சமயம் சீனாவும் 29% சரிவை எதிர்கொண்டுள்ளது.
  • ஆசியான் அமைப்பின் உறுப்பினர் நாடுகள் சுமார் 2% அதிகரிப்பையும், இந்தியா 13% அதிகரிப்பையும் கண்டுள்ளது.
  • பசுமைத் துறை திட்டங்களில் இந்தியா வளர்ச்சியைக் கண்டுள்ளது.
  • இந்தியாவில் சர்வதேச திட்ட நிதி ஆனது எண்ணிக்கையில் 23% மற்றும் மதிப்பில் 33% குறைந்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் உள்கட்டமைப்பு, வேளாண் சார் உணவு அமைப்புகள் மற்றும் நீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட நிலையான மேம்பாட்டு இலக்குகளுடன் தொடர்புடைய துறைகளில் முதலீடுகள் 11% குறைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்