இந்தியப் பிராந்தியக் கண்காணிப்பு அமைப்பானது (Indian Regional Navigation Satellite System- IRNSS) இந்தியக் கடல் பகுதியில் சர்வதேசக் கடல்சார் அமைப்பின் (International Maritime Organisation - IMO) செயல்பாடுகளுக்காக IMO அமைப்பினால் மேற்கொள்ளப் படும் உலகளாவிய ரேடியோ கண்காணிப்பு அமைப்பின் ஒரு கூறாக ஏற்றுக் கொள்ளப் பட்டு உள்ளது.
இது குளோனாஸ் மற்றும் ஜிபிஎஸ் போன்று இடம் குறித்த தகவல்களைப் பெறுவதற்கு வேண்டி IRNSS அமைப்பைப் பயன்படுத்திட கப்பல்களை அனுமதிக்கின்றது.
இந்தக் கண்காணிப்பு அமைப்பானது இந்தியக் கடல் பகுதியில் 1500 கிலோ மீட்டர் வரை தனது பணியை மேற்கொள்கின்றது. இது இங்கு ஜிபிஎஸ் என்பதற்கு மாற்றாக விளங்குகின்றது.
IRNSS அமைப்பின் செயல்பாட்டுப் பெயர் நேவிக் (NAVIC) என்பதாகும்.
இது தனது சுற்று வட்டப் பாதையில் 8 தொகுப்புகளை (வலையமைப்புகளை) கொண்டுள்ளது.
எனினும் IRNSS ஒரு உலகளாவிய கண்காணிப்பு அமைப்பு இல்லை, மாறாக இது ஒரு பிராந்தியக் கண்காணிப்பு அமைப்பு ஆகும்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவற்றிற்குப் பிறகு உலகில் ஒரு தனிச்சுதந்திர மற்றும் பிராந்திய செயற்கைக் கோள் கண்காணிப்பு அமைப்பைக் கொண்ட 4வது நாடு இந்தியா ஆகும்.