இது ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் வெளியிடப் படுகின்றது.
இது 1990 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 236 நாடுகள் மற்றும் நிலப் பிரதேசங்களில் உள்ள வனங்களின் நிலைமை குறித்து ஆய்வு செய்துள்ளது.
உலகமானது 1990 ஆம் ஆண்டு முதல் 178 மில்லியன் ஹெக்டேர் பரப்பிலான வனத்தை இழந்துள்ளது. இது லிபியாவின் நிலப்பகுதிக்குச் சமமானதாகும்.
ஆப்பிரிக்கக் கண்டமானது 2010-2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நிகர வன இழப்பில் ஒரு மிகப்பெரிய வருடாந்திர இழப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. இதற்கு அடுத்து தென் அமெரிக்கா உள்ளது.
மறுபுறம், 2010-2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நிகர வனப்பகுதி அதிகரிப்பை ஆசியா கொண்டுள்ளது. இதற்கு அடுத்து ஓசியானியா மற்றும் ஐரோப்பா உள்ளன.
உலகின் மொத்த வனப் பகுதி 4.06 பில்லியன் ஹெக்டேராகும். இது மொத்த நிலப்பரப்பில் 31 சதவீதமாகும்.
உலக வனங்களின் மிகப்பெரிய விகிதமானது வெப்ப மண்டல (45%) காடுகளாக உள்ளது. இதற்கு அடுத்து வடதுருவக் காடுகள், மித வெப்ப மண்டலக் காடுகள், மற்றும் உப வெப்ப மண்டலக் காடுகள் உள்ளன.
மொத்த அளவில் 54%ற்கு மேற்பட்ட உலகக் காடுகளானது ரஷ்யக் கூட்டமைப்பு, பிரேசில், கனடா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய 5 நாடுகளில் மட்டுமே காணப் படுகின்றது.
விகிதாச்சார அடிப்படையில் அதிக அளவிலான தோட்டக் காடுகள் தென் அமெரிக்காவில் உள்ளன. அதே சமயம் இது ஐரோப்பாவில் குறைவாக உள்ளது.