TNPSC Thervupettagam

உலகளாவிய வனப் பகுதியில் பதிவாகியுள்ள உயர்வு

July 26 , 2024 120 days 182 0
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் வெளியிடப்பட்ட இந்த அறிக்கைக்கு ‘உலக வன அறிக்கை 2024’ எனப் பெயரிடப் பட்டுள்ளது.
  • அதிகபட்சமாக 19,37,000 ஹெக்டேர் காடுகளின் பரப்பளவைக் கொண்டு சீனாவானது இதில் உலகளவில் முன்னணியில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து 4,46,000 ஹெக்டேர் பரப்பளவுடன் ஆஸ்திரேலியாவும், அதனை அடுத்து இந்தியாவும் இதில் இடம் பெற்றுள்ளன.
  • இந்தியா, 2010 முதல் 2020 வரை ஆண்டுதோறும் 2,66,000 ஹெக்டேர் காடுகளின் பரப்பு உயர்வினைப் பெற்றுள்ளது.
  • இந்த காலக் கட்டத்தில் மிக அதிக வனப் பரப்பளவைக் கொண்ட முதல் 10 நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • சிலி, வியட்நாம், துருக்கி, அமெரிக்கா, பிரான்சு, இத்தாலி மற்றும் ருமேனியா ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நாடுகளில் அடங்கும்.
  • 2000 முதல் 2010 வரையில் மற்றும் 2010 முதல் 2020 வரையிலான காலக் கட்டங்களில் மொத்த உலகளாவியச் சதுப்புநில இழப்பு விகிதம் 23% குறைந்துள்ளதாகவும் இந்த அறிக்கை கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்