TNPSC Thervupettagam

உலகளாவிய வர்த்தகக் கண்ணோட்டம் மற்றும் புள்ளிவிவரங்கள்

April 13 , 2023 463 days 199 0
  • புதிய "உலகளாவிய வர்த்தகக் கண்ணோட்டம் மற்றும் புள்ளி விவரங்கள்" அறிக்கை என்பது 2023 ஆம் ஆண்டிற்கான சந்தை மாற்று விகிதங்களில் உண்மையான உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி மேம்பாட்டினை 2.4% ஆக மதிப்பிடுகிறது.
  • இது உலக வர்த்தக நிறுவனத்தினால் வெளியிடப் பட்டது.
  • 2022 ஆம் ஆண்டில் உலக வணிகப் பொருட்களின் மதிப்பு 12% உயர்ந்து 25.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
  • உலக வர்த்தகச் சேவை வர்த்தகத்தின் மதிப்பு 2022 ஆம் ஆண்டில் 15% அதிகரித்து 6.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
  • வர்த்தகம் மற்றும் உற்பத்தி மேம்பாடு ஆகிய இரண்டின் மதிப்பீடுகளும் கடந்த 12 ஆண்டுகளில் முறையே 2.6% மற்றும் 2.7% என்ற அளவில் சராசரியை விடக் குறைவாக உள்ளன.
  • பொருட்களின் ஏற்றுமதியில் இந்தியா 18வது இடத்தினைப் பெற்றுள்ள நிலையில், இந்தியா உலக நாடுகளின் வணிகப் பொருட்களின் உலகளவிலான வர்த்தகத்தில் 9வது இறக்குமதியாளராகவும் உள்ளது.
  • வர்த்தகம் சார்ந்த சேவை ஏற்றுமதியைப் பொறுத்த வரையில், இந்தியா 313 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் அல்லது உலகளவில் 4.4 சதவீதத்துடன் 7வது இடத்தைப் பெற்றது.
  • இந்திய இறக்குமதிகளின் மதிப்பானது, 263 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது உலகளவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகை வணிகச் சேவைகளில் 4 சதவீதத்தினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்