TNPSC Thervupettagam

உலகளாவிய வலைதள தினம் – ஆகஸ்ட் 01

August 2 , 2023 483 days 225 0
  • உலகளாவிய வலை தளம் (www) உருவாக்கப்பட்டதை நினைவு கூருவதற்காகவும், உலகில் அதன் தாக்கத்தை அங்கீகரிப்பதற்காகவும் இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • 1991 ஆம் ஆண்டு இந்த நாளில், டிம் பெர்னர்ஸ்-லீ உலகளாவிய வலை தளத்தினை அறிமுகம் செய்யும் ஒரு திட்டத்தை ஆல்ட். ஹைபர்டெக்ஸ்ட்  (தகவல் இணைப்பு உள்ளீடுகளைக் கொண்ட) செய்திக் குழுவில் வெளியிட்டார்.
  • 1989 ஆம் ஆண்டு சர் டிம் பெர்னர்ஸ்-லீ என்பவரால் இந்தத் தளம் உருவாக்கப் பட்டது.
  • CERN அமைப்பில் உள்ள ஆராய்ச்சியாளர்களிடையேத் தகவல்களைப் பகிர்வதற்கும் தகவல் மேம்பாட்டினை மேற்கொள்வதற்கு ஏதுவாகவும் அமைந்த “பரவலாக்கப்பட்ட தகவல் அமைப்பிற்கான” முன்மொழிதலை அவர் சமர்ப்பித்தார்.
  • முதல் இணையச் சேவையகம், “http,” மற்றும் முதல் இணைய உலாவி, “WorldWideWeb” (பின்னர் Nexus என மறுபெயரிடப் பட்டது) ஆகியவை 1990 ஆம் ஆண்டில் பெர்னர்ஸ்-லீ மற்றும் அவரது சகாவான ராபர்ட் கைலியாவ் ஆகியோரால் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்