GIFT நகரில் உள்ள சர்வதேச நிதிச் சேவை மையம் (IFSC) ஆனது, இந்திய எரிவாயு பரிமாற்றம் (IGX) மற்றும் குஜராத் மாநில பெட்ரோலியம் கழகம் (GSPC) ஆகியவற்றுடன் ஒரு மூலோபாயக் கூட்டணியில் இணைந்துள்ளது.
இந்த ஒத்துழைப்பு ஒரு முன்னோடியான உலகளாவிய ஹைட்ரஜன் வர்த்தக நெறிமுறையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது உலக அளவில் மேற்கொள்ளப்படும் இத்தகைய இரண்டாவது வகையாகும்.
இது GIFT நகரை உலகளாவியப் பசுமை ஹைட்ரஜன் சந்தையில் முன்னணி இடத்தில் நிறுத்தும்.
இந்தக் கூட்டணி உலகளாவிய ஹைட்ரஜன் விலைக் குறியீட்டை அறிமுகப்படுத்த உள்ளது.
இது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பசுமை ஹைட்ரஜன் துறையில் விலை நிர்ணயிப்பு மற்றும் சந்தை தகவல்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு அளவுருவாகும்.