கடந்த 20 ஆண்டுகளில், குறைந்தபட்சம் 75% தீவிர வானிலை நிகழ்வுகளால் பள்ளிகள் மூடப் பட்டன என்பதோடு இது சுமார் 5 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்களை பாதித்தது.
ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியில், கல்வியின் எந்த நிலையிலும் பாலினச் சமத்துவம் அடையப்படவில்லை என்ற நிலையில் ஆண்களை விட பெண்களே அதிகம் பள்ளிக்கு செல்லவில்லை.
வாசிப்புத் திறனில், உலக அளவில், கீழ் இடைநிலைக் கல்வியின் முடிவில் ஒவ்வொரு 100 ஆண் குழந்தைகளுக்கும் 115 பெண் குழந்தைகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் 81% ஆண்களும் 75% பெண்களும் கைபேசி வைத்திருந்தனர்.
2018-23 ஆம் ஆண்டுகளில், அறிவியல், தொழிநுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறை சார் (STEM) பட்டதாரிகளில் பெண்களின் பங்கு 35% ஆகும்.
இந்தியாவில், மழைப்பொழிவு ஆனது ஒரு குழந்தையின் முதல் 15 ஆண்டுகளில் ஐந்து வயதில் வார்த்தைப் பிரயோகத் திறனையும், 15 வயதில் கணிதம் மற்றும் அறிவாற்றல் சாராத திறன்களையும் எதிர்மறையாகப் பாதித்தது.