பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனமானது அதன் தனித்துவமான உலகளாவிய சுகாதார நலக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இது காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தோருக்கு, உள்நாட்டு மற்றும் சர்வதேச (இந்தியாவிற்கு வெளியே) மருத்துவச் சேவை வழங்கீட்டு நிறுவனங்களில் திட்டமிடப் பட்ட மற்றும் அவசரச் சிகிச்சை ஆகிய இரண்டையும் (இந்தியாவிற்குள்) தடையற்ற முறையில் பெறுவதற்கு வகை செய்கிறது.
இது இந்தியக் காப்பீட்டுத் துறையில் முதன்முதலில் மேற்கொள்ளப்படும் உலகளாவிய சுகாதார நலக் காப்பீட்டு வசதியாகும்.