உலக பொருளாதார மன்றத்தின் (WEF - World Economic Forum) வருடாந்திர கூட்டத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான உலகளாவியத் திறன் போட்டிக் குறியீடானது (Global Talent Competitive Index - GTCI) வெளியிடப் பட்டுள்ளது.
INSEAD வணிகப் பள்ளியானது கூகுள் மற்றும் அடெக்கோ குழுமத்தின் உதவியுடன் GTCI அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தக் குறியீட்டில் இந்த ஆண்டு இந்தியா எட்டு இடங்கள் முன்னேறி, 72வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தக் குறியீட்டில் சுவிட்சர்லாந்து முதலிடத்தையும் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களையும் பிடித்துள்ளன.
GTCI பற்றி
GTCI ஆனது 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
GTCI என்பது திறமைகளுக்காகப் போட்டியிடும் நாடுகளின் திறனை அளவிடும் ஒரு வருடாந்திரத் தரப்படுத்தல் அறிக்கையாகும்.
GTCI ஆனது ஈர்த்தல், தக்க வைத்தல், இயக்குதல், வளர்தல், தொழில் திறன் மற்றும் உலகளாவிய அறிவு திறன் ஆகிய ஆறு குறிகாட்டிகளின் அடிப்படையில் நாடுகளைத் தரவரிசைப் படுத்தியுள்ளது.