TNPSC Thervupettagam

உலகளாவியப் பசுமை இல்ல வாயுக் கண்காணிப்பு உள்கட்டமைப்பு

April 6 , 2023 604 days 284 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பானது ஒரு புதிய உலகளாவியப் பசுமை இல்ல வாயுக் கண்காணிப்பு உள்கட்டமைப்பினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது புவியை வெப்பமாக்கும் மாசுபாடுகளை அளவிடுவதற்கான சிறந்த வழிகளை வழங்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, மேலும், சரியான கொள்கைத் தேர்வுகளை அறிவிப்பதற்கும் உதவுகிறது.
  • இது விண்வெளியில் அமைந்த மற்றும் நிலப்பரப்பில் அமைந்தக் கண்காணிப்பு அமைப்புகளை ஒருங்கிணைக்கும்.
  • மூன்று முக்கியப் பசுமை இல்ல வாயுக்கள் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை ஆகும்.
  • அவற்றில், பருவநிலை மீது 66% என்ற வெப்பமயமாதலின் அதிக அளவிலான ஒரு விளைவினை வழங்கும் வாயு CO2 ஆகும்.
  • 2020 முதல் 2021 ஆம் ஆண்டு வரை பதிவான CO2 அளவுகளின் உயர்வானது, கடந்தப் பத்தாண்டுகளில் பதிவான சராசரி உயர்வு விகிதத்தை விட அதிகமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்