G20 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில், பிரேசில் நாடானது பட்டினி மற்றும் வறுமைக்கு எதிரான ஒரு உலகளாவியக் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப் படுத்தியது.
இந்தியா உட்பட 81 நாடுகள், 26 சர்வதேச நிறுவனங்கள், 9 நிதி நிறுவனங்கள் மற்றும் 31 மனிதவினப் பற்று சேவை அறக்கட்டளைகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இந்தக் கூட்டணியில் ஏற்கனவே இணைந்துள்ளன.
பட்டினி மற்றும் வறுமையை ஒழிப்பதை ஒரு நோக்கமாகக் கொண்ட நாடுகள் பரஸ்பர (ஒன்றுக்கொன்று தங்களின்) பொதுக் கொள்கைகளை ஆதரிக்கும் தளத்தை இந்தக் கூட்டணி வழங்கும்.
விருப்பமுள்ள அனைத்து ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் நாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகள், மேம்பாட்டிற்கானப் பங்குதார நாடுகள் மற்றும் அறிவு நிறுவனங்களுக்கு இந்தக் கூட்டணியில் இணைய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்தக் கூட்டணியின் முக்கியப் பங்குதாரர்களில் FAO, UNICEF, WFP, உலக வங்கி மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள் அடங்கும்.
அதன் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் பின்வருவன உள்ளிட்ட பல்வேறு உத்திகளை உள்ளடக்கியது: பள்ளி உணவு வழங்கீட்டுத் திட்டம்; பணப் பரிமாற்றம்; சிறு விவசாயி மற்றும் குடும்ப வேளாண்மை ஆதரவுத் திட்டங்கள்; சமூக-பொருளாதார உள்ளடக்க திட்டங்கள்; ஒருங்கிணைந்த பேறுகால மற்றும் குழந்தைப் பருவ ஆதரவுத் திட்டங்கள்; மற்றும் நீர் அணுகல் தீர்வுகள்.