- 2018 ஆம் ஆண்டு உலகளாவியப் பட்டினிக் குறியீட்டின்படி (GHI - Global Hunger Index), உலக அளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகியவை 20.9 சதவீதமாக குறைந்துள்ளது. 2000 ஆம் ஆண்டு குறியீட்டின்படி இவை 29.2 சதவீதமாக இருந்தது.
- 2018 ஆம் உலகளாவியப் பட்டினிக் குறியீட்டின் அறிக்கையானது “கன்சர்ன் வேர்ல்டுவைடு” (அயர்லாந்து) மற்றும் “Welthungerhilfe” (ஜெர்மனி) என்ற இரண்டு அரசு சாரா நிறுவனங்களால் கூட்டாக தயாரிக்கப்பட்டது.
- இந்த GHI நான்கு கூறுகளைக் கொண்டது.
- ஒட்டுமொத்த மக்கள்தொகையில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை உள்ளவர்களின் சதவிகிதம்.
- ஐந்து வயதிற்கு உட்பட்ட எடை குறைந்த குழந்தைகளின் விகிதம்.
- ஐந்து வயதிற்கு உட்பட்ட உயரம் குறைந்த குழந்தைகளின் விகிதம்.
- ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம்.
- 2016 ஆம் ஆண்டின்படி ஐந்து வயதுக்குக் கீழுள்ளவர்களின் இறப்பு விகிதம் 4.2% ஆக உள்ளது. இது 2000 ஆம் ஆண்டில் 8.1% ஆக இருந்தது.
- இந்த ஆய்வுகளிலிருந்து
- 2030 ஆம் ஆண்டில் பட்டினிக் குறைப்பு இலக்கை 50 நாடுகள் எட்டாது
- 79 நாடுகள் ஏற்கெனவே அந்த இலக்கை எட்டத் தவறிவிட்டன
- என்று இந்த அறிக்கை கூறுகிறது.
- முதல் 5 நாடுகள் : பெலாரஸ், கியூபா, எஸ்தோனியா, குவைத் மற்றும் லத்திவியா (அனைத்து நாடுகளும் முதலிடத்தில்).
- தரவரிசையில் கடைசி 5 இடங்களைப் பெற்ற நாடுகள் : ஜாம்பியா, மடகாஸ்கர், ஏமன், சாட் மற்றும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு (119வது இடம்)
- இந்த அறிக்கையின்படி, உலகம் முழுவதும் ஏறத்தாழ 124 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த எண்ணிக்கை 80 மில்லியனாக இருந்து அதிகரித்துள்ளது.
பின்னணி
- 2006ல் உருவாக்கப்பட்ட GHI ஆனது ஆரம்பத்தில் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IFPRI - International Food Policy Research Institute) மற்றும் வெல்த்ஹங்கர்லைப்-ஆல் (Welthungerhilfe) வெளியிடப்பட்டது.
- 2007ஆம் ஆண்டில் அயர்லாந்தைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான கன்சர்ன் வேர்ல்டுவைடு (Concern Worldwide) ஆனது இணை வெளியீட்டாளராக இணைந்ததது.
- GHI ஆனது 2018 ஆம் ஆண்டில், வெல்த்ஹங்கர்லைப் மற்றும் கன்சர்ன் வேர்ல்டுவைடு மட்டும் இணைந்த ஒரு கூட்டுத் திட்டமாக மாறியது, IFPRI ஆனது இந்த குறியீட்டின் ஈடுபாட்டிலிருந்து ஒதுங்கியது.
இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள்
- இந்த அறிக்கையின்படி, மொத்தமுள்ள 119 நாடுகளில் இந்தியா 103-வது இடத்தில் உள்ளது.
- இந்தியா, “கடுமையான பசியில் வாடுபவர்கள்” என்ற பிரிவில் உள்ளது. இந்தப் பிரிவில் மொத்தம் 45 நாடுகள் உள்ளன.
- 13வது ஆண்டாக வெளிவரும் உலகளாவியப் பட்டினிக் குறியீடானது, நான்கு முக்கிய குறிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. ஊட்டச்சத்துக் குறைவு, குழந்தை இறப்பு வீதம், குழந்தை மெலிதல் மற்றும் குழந்தைகளின் எடைக்கேற்ற உயரம் ஆகியவை இந்த நான்கு முக்கியக் குறிப்பீடுகளாகும்.
- சீனா (25வது இடம்), நேபாளம் (72), மியான்மர் (68), இலங்கை (67) மற்றும் வங்க தேசம் (86) உள்ளிட்ட பல அண்டை நாடுகளை விட பின்தங்கிய இடத்தில் இந்தியா உள்ளது.
- பாகிஸ்தான் 106-வது இடத்தில் உள்ளது.