TNPSC Thervupettagam

உலகளாவியப் பணப் பரிமாற்றம் 2023

December 22 , 2023 338 days 312 0
  • உலக வங்கியின் சமீபத்திய புலம்பெயர்வு மற்றும் மேம்பாடு அறிக்கையானது, 2023 ஆம் ஆண்டில் குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கான (LMICs) பண அனுப்பீடுகளில் தொடர்ச்சியான ஒரு வளர்ச்சி பதிவாகியுள்ளதை வெளிப்படுத்துகிறது.
  • உலக வங்கியின் ஒரு கூற்றுப்படி பண அனுப்பீடுகளில் அதிகப் பங்கினைப் பெறும் நாடாக இந்தியா திகழ்கிறது.
  • இந்தியப் பொருளாதாரம் ஆனது, ஆண்டிற்கு 125 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்றுள்ளது.
  • மெக்சிகோ (67 பில்லியன் அமெரிக்க டாலர்), சீனா (50 பில்லியன் அமெரிக்க டாலர்), பிலிப்பைன்ஸ் (40 பில்லியன் அமெரிக்க டாலர்), எகிப்து (24 பில்லியன் டாலர்) ஆகிய நாடுகள் பண அனுப்பீடுகளில் அதிகப் பங்கினைப் பெறும் முதல் ஐந்து நாடுகள் ஆகும்.
  • 2023 ஆம் ஆண்டில் குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு அனுப்பப்படும் பணம் 3.8 சதவீதம் அதிகரித்து, மொத்தம் 669 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது.
  • தெற்காசியாவில் 2023 ஆம் ஆண்டில் பணம் அனுப்பீடு 7.2% அதிகரித்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 200 அமெரிக்க டாலர்களை அனுப்பச் செய்வதற்கான பண அனுப்பீட்டுச் செலவினங்கள் சராசரியாக 6.2% என்ற அளவில் தொடர்ந்து அதிகமாக உள்ளது.
  • சராசரியாக 12.1% செலவினத்துடன், பணம் அனுப்புவதற்கான அதிகச் செலவினமிக்க வழியாக வங்கிகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்